தூத்துக்குடி மாவட்டம் அழகேசபுரத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை நடைப்பெற்றது.

தூத்துக்குடி நடராஜபுரம், அழகேசபுரம் 8வது வார்டு பகுதியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் உறுப்பினர் சேர்க்கை நடத்தினர்.

இதில் பொது மக்கள் தானாக  முன் வந்து தங்களை இணைத்து கொண்டனர். ரஜினி கட்சி ஆரம்பிக்கும் முன்னரே மக்கள் வோட்டர் கார்டு, போட்டோ கொண்டு வந்து தங்களை இணைத்து கொள்ளும்படி கூறியதனால்  மகிழ்சியாக மன்றத்தினர் சேர்கையில் ஈடுபட்டனர்.

இதில் வடக்கு மண்டல செயலாளர் s. செல்வம், மாவட்ட வர்த்தக அணி s. மாரிமுத்து, வடக்கு மண்டல செயற்குழு உறுப்பினர் s. மாரியப்பன், k. ரெங்கன் மற்றும் 8வது வார்டு செயலாளர் எஸ்ரா ஆகியோர் உடனிருந்தனர்.