இந்தியாவிலேயே முதல் பெண் வீராங்கனை பயன்படுத்தப்போகும் சைக்கிள் - பரிசளித்த கனிமொழி எம்பி!
நிருபர்
July 06, 2022
இந்தியாவிலேயே முதல் பெண் வீராங்கனை பயன்படுத்தப்போகும் சைக்கிள் - பரிசளித்த கனிமொழி எம்பி!தூத்துக்குடி செய்திகள் Thoothukudi news local news லோக்கல் நியூஸ் online news online tamil news தமிழ் செய்திகள் தமிழ் நியூஸ்

சைக்கிள் போட்டிகளில் சாதனை படைத்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனைக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள சைக்கிளை கனிமொழி எம்பி பரிசாக வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. தனது 13 வயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவரான இவர் மாவட்ட, மண்டல அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கான சைக்கிள் வாங்குவதற்கு அவரிடம் போதுமான வசதியில்லாத காரணத்தினால் அந்த போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்களிடம் தனக்கு சைக்கிள் வேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து, புதிய சைக்கிள் ஒன்றை வழங்கினார். இந்த சைக்கிளின் மூலமாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் சைக்கிள் போட்டிகளில் கலந்துகொண்டு குழு போட்டியில் தங்கப் பதக்கத்தையும், தனித்துப் போட்டியிட்டதில் வெள்ளிப் பதக்கத்தையும், கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் குழு போட்டியிலும் கலந்துகொண்டு 3-ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.

இந்நிலையில் தற்போது இஸ்ரேலில் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் "உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப்" போட்டியில் பங்கேற்பதற்கான பிரத்தியேக சைக்கிளை வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், இன்று தூத்துக்குடி அலுவலகத்தில் சைக்கிள் வீராங்கணைக்கு ரூ.14 லட்ச மதிப்புடைய சைக்கிளை கனிமொழி எம்பி பரிசளித்தார். இந்தியாவிலேயே இந்த சைக்கிளை பயன்படுத்தப்போகும் முதன் பெண் வீராங்கனை ஸ்ரீமதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உடனிருந்தார்.