முதலீட்டாளர் மாநாட்டில் 60 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் - ரூ.53 ஆயிரம் கோடி துாத்துக்குடியில் முதலீடு!
நிருபர்
July 05, 2022
முதலீட்டாளர் மாநாட்டில் 60 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் - ரூ.53 ஆயிரம் கோடி துாத்துக்குடியில் முதலீடு!தூத்துக்குடி செய்திகள் Thoothukudi news local news லோக்கல் நியூஸ் online news online tamil news தமிழ் செய்திகள் தமிழ் நியூஸ்
<p><b>தமிழகத்தில் நேற்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், 60 நிறுவ னங்கள், 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அரசுடன் கையெழுத்திட்டன. </b><br></p><p>இதில், ‘ஆக்மே' நிறுவனம், 52 ஆயிரத்து 695 கோடி ரூபாய் முதலீட்டில், துாத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா உற்பத்தி திட்டத்தைத் துவங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>தமிழக தொழில் துறை சார்பில், முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் நேற்று நடந்தது. இதில், ஆக்மே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் வாயிலாக, துாத்துக்குடியில் உள்ள 2,095 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>