சபரிமலையில் இன்று முதல்(20.12.2020) தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சபரிமலை சன்னிதானம் கோவில்  மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம், சன்னிதானம் மற்றும் பம்பையில் பக்தர்கள் தங்குவதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து இன்று முதல் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

கூடுதல் பக்தர்கள் வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.