கல்லூரி முதல்வரை மாற்ற  தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு இசக்கிராஜா தேவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர்  இசக்கிராஜா தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முதல்வரை உடனடியாக பணி மாறுதல் செய்ய வேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 12 மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிஎம்டி கல்லூரி  மாணவர்கள் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி வகுப்புகளை  புறக்கணிப்பு செய்தனர். அதில் பங்கு பெற்ற மாணவர்கள் மீது கல்லூரி முதல்வர் ஹரிகெங்காரம் தன்னுடைய முறைகேடுகள் மற்றும்  மோசடிகளை மறைப்பதற்காக  சதி  திட்டமிட்டு மாணவர்களுடன்  மோதலை உருவாக்கிவிட்டார். மேலும் மாணவர்கள்   மீது  காவல் துறையில்  பொய்யான புகார் கொடுத்து அவர்கள் மேல்  வழக்குகளை பதிவு செய்ய வைத்தார்.

கல்லூரியின்  முதல்வர் தன்னுடைய மோசடியை  மறைப்பதற்காக இன்று வரை மாணவர்களை கேடயமாக பயன்படுத்தி அவர்களுக்குள் பிரிவினையை உருவாக்கி  வருகிறார். இவருடைய தவறான  செயலால்  அங்கு படித்த மற்றும் படிக்கும்  மாணவர்களின்  கல்வி,  வேலைவாய்ப்பு  பெரிதும் பாதிக்கபட்டுவிட்டது. மேலும் மாணவர்கள்   மன உளைச்சல்  மற்றும் சமூக பொருளாதார பிரச்சனையில் உள்ளனர். கல்லூரியில் தனி அலுவலர் நியமனம் செய்த பிறகும் இந்த நிலை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.

இந்தப் பிரச்சினையில் தென்காசி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் போடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களின் மீது போடப்பட்ட பொய் வழக்கு வாபஸ் பெறப்பட வேண்டும் என்று கல்லூரி முதல்வருக்கு உத்தரவு போடப்பட்டு  இருக்கிறது.

மேலும் தங்களின்  தனி அலுவலர் நேரடி விசாரணை மற்றும் கடிதத்தின் மூலமாக மாணவர்கள் மீது உள்ள வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு மற்றும் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள், உத்தரவுகள்,  அரசாணைகள்  எதையுமே இந்த கல்லூரி முதல்வர் மதிக்காமல் தான் தோன்றி தனமாக செயல்படுகிறார். இப்படி  விதிக்கு புறம்பாக செயல்படும் முதல்வர் மீது பல புகார்கள் மோசடி குற்ற சாட்டுகள் இருந்தும் நடவடிக்கை  இல்லை.

எனவே தாங்கள்  தனி அலுவலர் பாரபட்சம் பார்க்காமல் மாணவர்கள் நலன் கருதி   கல்லூரி முதல்வர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில்  மாணவர்களுடன் இணைந்து பெற்றோர்கள், தேவர் கல்வி நலச்சங்கம்,   தேவர் கல்லூரி மீட்பு குழு, அனைத்து சமுதாய அமைப்புகள்  மற்றும் முக்குலத்தோர் சமுதாய அமைப்புகள் ஒன்றிணைத்து கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்காத உங்களுக்கு தனி அலுவலர் எதிராகவும் கல்லூரி முதல்வருக்கு எதிராகவும்  மிகப்பெரிய போராட்டங்களை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

தாங்கள் தயவு கூர்ந்து இதில் தலையிட்டு  மாணவர்களின்   எதிர் காலம் கருதி  அவர்கள்  மீது உள்ள வழக்குகளை முடித்து வைத்து அவர்கள் எதிர்காலத்தை நல்லபடியாக அமைய வேண்டும் என வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.