தாடி, முறுக்கு மீசையுடன் சொல்லப்படாத கதை என பதிவிட்டுள்ள நடிகர் சிம்பு
நிருபர்
December 07, 2020
தாடி, முறுக்கு மீசையுடன் சொல்லப்படாத கதை என பதிவிட்டுள்ளார் சிம்பு

புதுகெட்டப்பில் போட்டோஷூட் நடத்தியுள்ள சிம்பு, அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் ‘சொல்லப்படாத கதை’ என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படமும், மாநாடு திரைப்படமும் உருவாகி வருகிறது. மேலும் இவர் கடந்த அக்டோபர் மாதத்தில் சமூக வலைத்தளத்தில் இணைந்தார். அதில் தனது படங்கள் குறித்த அறிவிப்புகள், போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

அந்தவகையில் தற்போது கேங்ஸ்டர் கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தியுள்ள சிம்பு, அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் ‘சொல்லப்படாத கதை’ என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

சிம்புவின் இந்த மாஸ் லுக்கை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகர்களுக்கே டஃப் கொடுக்குறியே தலைவா என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன.