தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு டீ20 போட்டிகளிலும் ஜடேஜா பங்கேற்கமாட்டார்

நேற்று நடைபெற்ற டீ20 போட்டியில், அதிரடியாக ஆடிய ஜடேஜா 44 ரன்களை குவித்தார்.

பேட்டிங்கின் போது அவரது தலையில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ஜடேஜா மருத்துவ கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர்,அவருக்கு பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் ஷ்ரதுல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான, மீதமுள்ள இரண்டு டீ20 போட்டிகளிலும் ஜடேஜா பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.