தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 60வது வார்டில் திமுக வேட்பாளர் பாலகுருசாமி வேட்புமனு தாக்கல்
நிருபர்
February 04, 2022
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 60வது வார்டில் திமுக வேட்பாளர் பாலகுருசாமி வேட்புமனு தாக்கல்
<p><b>தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான 60வது வார்டில் போட்டியிட திமுக வேட்பாளர் பாலகுருசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.</b><br></p><p>தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.</p><p>இந்த நிலையில் இன்று தெர்மல் நகர், கோவில்பிள்ளை நகர், சுனாமி குடியிருப்பு, ஹார்பர் எக்ஸ்பிரஸ் ரோடு, முத்து நகர் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட பொது பிரிவினருக்கான 60வது வார்டில் போட்டியிட திமுக சார்பில் பாலகுருசாமி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் இன்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.</p>