<p><b>இன்றைய தினம் ஜனவரி 25ம் தேதி  தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல அரசியல் கட்சி தலைவர்களும் மொழிப்போர் தியாகிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.</b><br></p><p>அந்த வகையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி தனது டிவிட்டர் பக்கத்தில், </p><p><b style="color: rgb(255, 0, 0);">" ஆதிக்க மொழியை எதிர்த்து, தாய்மொழித் தமிழுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த மொழிப்போர் வீரர்களின் நினைவு நாளான இன்று அவர்களின் தியாகத்தையும் நினைவையும் உலகத் தமிழர் அனைவரும் போற்றிடுவோம்" </b>என குறிப்பிட்டு மொழிப்போர் தியாகிகளின் தினத்தை அனுசரித்துள்ளார்.</p>