<p><b>ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதிகளில் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ. 5.81 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன.</b><br></p><p>ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நண்பர்கள் ஒன்று கூடி மது விருந்துடன் புத்தாண்டை வரவேற்பர். இதனால் புத்தாண்டிற்கு முந்தைய நாள் மற்றும் புத்தாண்டு தினத்தில் மது விற்பனை அமோகமாக இருக்கும்.</p><p>இதனை அடுத்து டிசம்பர் 31ம் தேதி சுமார் 2 கோடியே 69 லட்சமும்,&nbsp; ஜனவரி 1 ம் தேதி சுமார் 3 கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன என டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.</p>