கயத்தாறு அருகே முன்விரோத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
நிருபர்
December 29, 2021
கயத்தாறு அருகே முன்விரோத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
<p><b>கயத்தாறு முன்விரோதம் காரணமாக கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.</b><br></p><p>கயத்தாறு, சவலாப்பேரி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (65) த/பெ. சண்முகம் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகையா (29) த/பெ. முருகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24.12.2021 அன்று முத்துப்பாண்டி அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த சண்முகையா, முத்துபாண்டியிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து முத்துப்பாண்டி அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப் வழக்கு பதிவு செய்து சண்முகையாவை கைது செய்தார்.</p>