ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- உயிரிழந்த வீரர்களுக்கு விளாத்திகுளத்தில் அஞ்சலி!
நிருபர்
December 09, 2021
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- உயிரிழந்த வீரர்களுக்கு விளாத்திகுளத்தில் அஞ்சலி!
<p><b>குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு விளாத்திகுளத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.</b></p><p>குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் ,அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில், விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. </p><p>இதில், ராம காளியப்பன், செந்தில், விருதுநகர் காமாட்சி, சேது ராஜ், விளாத்திகுளம் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் மேடை சேர்மன், ஞானராஜ், கெத்து மற்றும் பொதுமகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.</p>