<p><b>சாத்தான்குளம் அருகே மாடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.</b></p><p>சாத்தான்குளம் வைத்திலிங்கபுரத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் ஞானசுந்தர் (27) என்பவர் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28.10.2021 அன்று அவருடைய வீட்டில் இருந்த மாடு ஒன்று காணாமல் போனது.</p><p>இதுகுறித்து ஞானசுந்தர் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில்&nbsp; சாத்தான்குளம் அமுதுண்ணகுடி பகுதியை சேர்ந்த மந்திரம் மகன் சுந்தர் (எ) பேத்தான் (35) என்பவர் லோடு வேனில் மாட்டை திருடிச் சென்றது தெரியவந்தது.</p><p>இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ் வழக்குப்பதிவு செய்து சுந்தர் (எ) பேத்தானை கைது செய்து சிறையில் அடைத்தார்.</p>