<p><b>பி.ஜெகவீரபுரம் (எ) சீல்நாயக்கன் பட்டி கிராமத்தில் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ள மயான பொதுப்பாதையை&nbsp; அகற்ற கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், கே.குமரெட்டியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பி.ஜெகவீரபுரம் (எ) சீல்நாயக்கன் பட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பொதுப்பாதையை ( புல எண் 352/38 , 307/14 ) சில தனிநபர்கள் ஆக்கிரமித்து, ஆட்டுக்கொட்டகை, குடியிருப்பு வீடுகளை உள்ளிட்டவைகளை அமைத்து, மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்ல முடியாமல் பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகிறார்கள்.</p><p>ஆகவே, தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மயான பொதுப்பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்படுத்தி தர கிராம பொதுமக்கள் சார்பில்&nbsp; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.</p>