விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து  விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில்  போலீசார் ஆங்காங்கே தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

போலீசாருக்கு  கிடைத்த இரகசிய தகவலின் படி விளாத்திகுளம் மீரான் பாளையத்தை சேர்ந்த குருசாமி மகன் முருகவேல் (55) என்பவர்  மளிகை கடை நடத்தி வந்த நிலையில் அவருக்கு சொந்தமான கடையில் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விற்பனை செய்தது  தெரியவந்தது, உடனே போலீசார் 4 சாக்கு பைகளில் ரூபாய் 28,000/- மதிக்கத்தக்க புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேற்படி புகையிலைப் பொருட்களை  குழந்தைகளுக்கு விற்பனை செய்த அதே ஊரைச் சேர்ந்த முருகவேல் மகன் ராதாகிருஷ்ணன் (26), மற்றும் முனியசாமி மகன் மாரி கண்ணன் (27) ஆகிய மூன்று  பேரையும் செய்து சிறையில் அடைத்தனர்.