<p><b>தூத்துக்குடியில் வ.உ.சி கல்லூரி சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை <span style="color: rgb(206, 0, 0);">கனிமொழி எம்பி </span>துவக்கி வைத்தார்.&nbsp;</b></p><p>கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் வஉசி கல்லூரி சார்பில் தூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவியர் களுக்கு மினி மாரத்தான் 09.10.2021 இன்று சனிக்கிழமை காலை&nbsp; கல்லூரி முன்பு தொடங்கியது.</p><p>இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சி.வீரபாகு வரவேற்புரை யாற்றினார். அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மினி மாரத்தான் போட்டியை கனிமொழி எம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரி செயலர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p>