தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்!
நிருபர்
September 13, 2021
தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்ப முள்ளவர்கள் 30.09.2021-ம் தேதிக்குள் அரசு பொது இ-சேவை மையம் மூலம் இணைய வழி வாயிலாக குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப் பங்களைச் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தெரிவித்துள் ளார்.

சென்னை கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளபடி, 04.11.2021 அன்று வரவுள்ள தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில், இந்திய வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 மற்றும் வெடிபொருள் திருத்தம் விதிகள் 2019-ன்படி தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள்; 30.09.2021-ம் தேதிக்குள் அரசு பொது இ-சேவை மையம் மூலம் இணைய வழி வாயிலாக கீழ்க்கண்ட ஆவணங்களுடன் விண்ணப் பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

1. கட்டிட வரைபடங்கள் - அசல்

2. கட்டிட உரிமைக்கான ஆவணம் / வாடகை ஒப்பந்தப் பத்திரம் - அசல்

3. ரூ.500 அரசுக்கணக்கில் செலுத்திய செலுத்துச் சீட்டு - அசல்

4. அடையாள அட்டை ( பான்கார்டு, ஆதார் கார்டு, குடும்ப அட்டை )

5. ஊராட்சி / நகராட்சியில் வரி செலுத்திய ஆவணங்கள்

6. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

இந்திய வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 மற்றும் வெடிபொருள் திருத்தம் விதிகள் 2019-ன் கீழ் உள்ள விதிமுறைகளின்படி, விண்ணப் பங்கள் பரீசீலனை செய்யப்பட்டு, தகுதியான மனுதாரர்களுக்கு தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் அவர்கள் தெரிவித்துள்ளார்.