தூத்துக்குடியில் இரும்பு கம்பிகள் திருட்டு : வாலிபர் கைது!
நிருபர்
September 11, 2021
தூத்துக்குடியில் இரும்பு கம்பிகள் திருட்டு : வாலிபர் கைது! Vilasal news, Thoothukudi news, Tamils news, crime news, விளாசல் நியூஸ்
<p><b>தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக வைத்திருந்த 20 கிலோ இரும்பு கம்பிகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். </b><br></p><p>தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகள் அமைப்பதற்கு மீளவிட்டான் 4வது ரயில்வே கேட் அருகே இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் 20 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகள் நேற்று காணாமல் போனது. இதுகுறித்து தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் தினேஷ்வர் (27) என்பவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.</p><p>புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் கார்த்திக் (33) என்பவர் இரும்பு கம்பிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். மேலும், ராஜகோபால் நகரைச் சேர்ந்த ஜெயசந்திரன் மகன் சின்னமுத்து (28) என்பவரை தேடி போலீசார் வருகின்றனர்.</p>