<p><b>நடிகர் விஷால் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.</b>&nbsp;</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/08/24/11629774520.jpg" style="width: 100%;"><br></p><p>நடிகர் விஷாலுக்கு வருகிற ஆகஸ்ட் 29 ம் தேதி அன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில்&nbsp; ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் , ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கி&nbsp; நடிகர் விஷாலின் பிறந்த நாளை கொண்டாட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்க தலைவர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.</p>