தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதல்வர் விருது வழங்கி பாராட்டு!
நிருபர்
August 14, 2021
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதல்வர் விருது வழங்கி பாராட்டு!

“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தூத்துக்குடி, அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு 100 நாள்களில் தீர்வு காணப்படும் என கூறப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இதைத்தொடர்ந்து, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டதின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், " உங்கள் தொகுதியில் முதலமைச்சர் " என்ற திட்டம் 100 நாட்களை இன்றுடன் நிறைவு பெறுகிறது.

மேலும், இதுவரை “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் நான்கரை லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 100 நாட்களில் இரண்டு லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விருது வழங்கினார்.