பிலவ வருடம் I ஆடி 29 I சனிக்கிழமை I ஆகஸ்ட் 14, 2021

மேஷம்

சிறப்பான நாளாக இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்

பரபரப்பான நாளாக இருக்கும். வளர்ச்சியில் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

மிதுனம்

சுமாரான நாளாக இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட அதிக உணர்ச்சிவசப்படுவீர்கள். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையை விரைவாக முடிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் வேறுபாடு காணப்படும். மற்றவர்களுடன் பேசும் போது கூடுதல் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். அது வருத்தத்தை ஏற்படுத்தும்.

கடகம்

அனுகூலமான நாளாக இருக்கும். சாதகமான பலன்கள் வந்து சேரும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்மம்

அனுகூலமான நாளாக இருக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். கடினமான வேலையையும் எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே திருப்தியான மனநிலை காணப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைக்காக செலவுகள் செய்வீர்கள்.

கன்னி

நம்பிக்கையின்மை நிலவும். இன்றைய நாளை எதிர்கொள்ள திணறுவீர்கள். கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. திட்டமிட்டு செயல்பட வேண்டும். குடும்பத்தில் சகஜமான அணுகுமுறை நல்லது. இதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் ஆரோக்கியமான உறவை பராமரிக்கலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பணத்தை சேமிப்பீர்கள்.

துலாம்

கடினமான நாளாக இருக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது. வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாத சூழல் காணப்படும். குடும்பத்தில் புரிந்துணர்வு குறையும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் அதிகரிக்கலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். உணர்ச்சிவசப்படாமல் இன்றைய நாளை அதன் போக்கில் விடுவது நல்லது. மன அமைதிக்கு ஆன்மிகம், பொழுதுபோக்கில் ஈடுபடலாம். வேலைப் பளு கடினமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி யின்மை காணப்படும். நிதி நிலை சாதகமாக இல்லை. வீண் செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு

இலக்குகளை நோக்கி பயணத்தைத் தொடர ஏற்ற நாள். வெற்றிகளைக் குவிப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் செயல்திறன் மேம்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். கடன் வாங்கி தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.

மகரம்

நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். கடினமான சூழலை சந்திக்க நிதானமாக இருப்பது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் தாமதங்கள் காணப்படும். குடும்பத்தில் கருத்துவேறுபாடு அதிகரிக்கலாம். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

கும்பம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாளாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் சாதகமாக முடியும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

மீனம்

சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.