அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்!
நிருபர்
August 05, 2021
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்

அதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.

கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவல் பாதிக்கப்பட்டு பின்னர் உடல்நலம் சீரானது. பிறகு உடல்நிலை மோசமாதனால் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் மதுசூதனன் உயிர்பிரிந்தது.

14 வயதில் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை தொடங்கிய மதுசூதனன், பின்னாளில் வடசென்னையில் மிகப்பெரும் அரசியல்வாதியாக உருவெடுத்தார்.

1991ல் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்று ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக பதவிவகித்தார்.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் அதிமுகவின் அவைத் தலைவராக இருந்துவந்தவர் மதுசூதனன்.

2017ல் அதிமுக இரண்டாக பிரிந்தபோது ஓபிஎஸ்-க்கு ஆதரவாக நின்றவர் மதுசூதனன்.

இபிஎஸ் அணி-ஓபிஎஸ் அணி என அதிமுக இருந்தபோது மதுசூதனனிடமே கட்சியின் பெயர், சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

'மதுசூதனன் இருக்கும்வரை அவர்தான் அதிமுகவின் அவைத் தலைவர்' என ஜெயலலிதா அறிவித்தது கடைசிவரை பின்பற்றப்பட்டது.