தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் சமீபகாலமாக அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் நெருங்கிய பழகி வருகிறார்.

அவரை ஸ்ருதிஹாசன் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது காதலனுடன் ஸ்ருதிஹாசன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

சமீபத்தில் காதலன் சாந்தனுவுடன் மும்பையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றிருந்தார் ஸ்ருதிஹாசன். அங்கு காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

தற்போது ஸ்ருதிஹாசனின் வயிற்றில் அவரது காதலன் சாந்தனு ‘ THUG LIFE' என்று எழுதியுள்ளார். அதுவும் சாக் பீஸால் எழுதி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.