குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர்.  பலர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.  தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.  இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டு உள்ளார்.