பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட ஹெராயின் போதைபொருள் தூத்துக்குடி கடல்பகுதியில் பிடிப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கடல்பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த  போது இந்திய கடல் எல்லைக்குட்பட்ட கடலில் ஒரு படகு  சென்று கொண்டு இருந்துள்ளது. அப்படக்கினை இந்திய கடலோர காவல்படையினர் சந்தேகித்து வழிமறித்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் பல கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் 5 துப்பாக்கிகள் இருந்துள்ளது. அதில் இலங்கையை சேர்ந்த 6 பேர் இருந்துள்ளனர்.இலங்கையை சேர்ந்த அந்த நபர்கள் யார்? அவர்கள் பின்புலம் என்ன? தீவிர விசாரணை மேற்கொண்டத்தில் முதல் கட்டமாக அவர்கள்  பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெராயின் என்பது போதைப்பொருள் ஆசிய பாப்பி ஆலை விதைகளில் இருந்து வரும் மொரிஃபின் இருந்து செயலாக்கப்பட்ட ஒரு மிகவும் போதை மருந்து . இது மத்திய நரம்பு மண்டலத்தை தடுக்க கூடியது.

மத்திய, மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், உளவுப்பிரிவு அதிகாரிகள் ரகசியமாக விசாரணை செய்து வருகின்றனர்.