தூத்துக்குடி அதிமுக பிரமுகரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சசிகலா!
நிருபர்
June 16, 2021
தூத்துக்குடி அதிமுக பிரமுகரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்த சசிகலா அதிமுகவில் பல மாற்றங்கள் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தான் அரசியலில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார் சசிகலா. அதிமுக தேர்தலில் தோற்று விட்டால் மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவதற்கு தான் சசிகலா இந்த சதித் திட்டத்தை திட்டுவதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அது, இப்போது உண்மையாகி விட்டது.

எனினும், சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என ஈபிஎஸ் திட்டவட்டமாக கூறுவதால், சசிகலா மீண்டும் கட்சியில் இணைவாரா இல்லையா என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதனிடையே, அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசுவது போன்ற ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாவது அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், சசிகலா மேலும் சில அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் முன்னாள் ஒன்றிய செயலாளர் மற்றும் தற்போது மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் வேலவனுடன், வி.கே சசிகலா பேசிய ஆடியோ தற்போது வெளியாகி தூத்துக்குடி மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலவனுடன், வி.கே சசிகலா அந்த ஆடியோவில் என்ன பேசி இருக்கிறார்கள் என்பதை நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் :